--- --:--:-- --

மதுரையில் மே:1 ஆம் தேதி துவக்கப்பட்ட அன்னவாசல் திட்டத்துக்கு ஐந்து லட்சம் நன்கொடை வழங்கினார் நடிகர் சூர்யா

22

ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதியவுணவு வழங்கும் இத்திட்டமானது, 3000 பேருக்கு உணவு வழங்கித் துவங்கப்பட்டது.இன்றைய நிலையில் நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன் மதியவுணவு வழங்கப்படுகிறது. 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உணர்வுப்பூர்வமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் நடிகர் சூர்யா இப்போது ‘ஆகாரம்’ மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக ஐந்து இலட்ச ரூபாயை நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்து மகிழ்ந்திருக்கின்றார். நடிகர் சூர்யா மேலும் நன்கொடை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் மதுரை சு.வெங்கடேசன் எம் பி.

Leave a Reply

Right Menu Icon