அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார்..!
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார். ரஜினிகாந்த் கடந்த 19ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றடைந்தார்.
அங்கு ரெஜிஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை நடைபெற்றது. இதை முடித்துக் கொண்ட ரஜினிகாந்த் அமெரிக்காவில் 18 நாட்கள் ஓய்வு எடுத்தார்.
அப்போது ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில் நாளை அதிகாலை ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.






