ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய பெண் காவலர்கள்..!
சேலத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வடமாநில இளைஞரை பெண் காவலர்கள் இரண்டு பேரை காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பீகாரை சேர்ந்த சிவக்குமார் அந்த இளைஞர் ரயில் நிற்பதற்குள் ஓடும்போது ஏற முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி அவர் நடைமேடையில் விழுந்ததோடு சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர்கள் மற்றும் இளைஞர் இழுத்து வந்து உயிரை காப்பாற்றியுள்ளனர்.
இளைஞரின் உயிரை காப்பாற்ற கையிலிருந்து உடைமைகளை தூக்கி எறிந்துவிட்டு பெண் காவலர்கள் சென்றனர். காப்பாற்றப்பட்ட இளைஞர் பின்னர் வேறு ஒரு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டார்.






