அதே முறுக்கு மீசை.. ‘பேட்ட’ ரஜினிகாந்த் கெட்அப்பில் நடிகர் தனுஷ்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பேட்ட இதில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். அந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. இதன்பின் கார்த்திக் சுப்புராஜ் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இதில் தனுஷ் நடித்து வருகிறார். இதற்க்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆகவே இதனை டி40 என்றே குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன. மாமனார் ரஜினியை இயக்கிய கையோடு அவரது மருமகன் தனுஷை இவர் இயக்க தொடங்கியுள்ளது பெரும் வாய்ப்பாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷின் கதாபாத்திரம் தொடர்பான புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. படப்பிடிப்பு முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இந்த படம் வெளியாகியுள்ளது.





