நடிகர் சங்கத்தில் இருந்து நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் நீக்கம்..!
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் நீக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் இருந்து தோல்வியடைந்த பாக்கியராஜ் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட நிர்வாகிகள் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து பொய்யான தகவலை பரப்பியதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்த நடிகரும், இயக்குனருமான பாக்யராஜூம், உதயாவும் ஆறு மாதங்களுக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடிகர் சங்க விதியின்படி உறுப்பினருக்கு எதிராக செயல்பட்ட காரணத்திற்காக இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





