--- --:--:-- --

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று கூடுகிறது..!

1

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று கூடுகிறது. கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டு முதல் கூட்டத்தொடர் என்கிற வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

 

விவசாயிகள் போராட்டத்தை காரணம் காட்டி 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

 

முதல் அமர்வுக்கு பிறகு மாநிலங்களவை 12-ஆம் தேதியும், மக்களவை 13ஆம் தேதி ஒத்தி வைக்கப்ப.ட்டன. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வுக்கு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.

 

பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற பாஜக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பெட்ரோல், டீசல் சமையல் கியாஸ் விலை உயர்வு விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதங்களில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon