--- --:--:-- --

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவனுக்கு ஆயுள் தண்டனை அளித்து அதிரடி தீர்ப்பு..!

12

நெல்லை மாவட்டம் குன்றத்தூரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வேன் ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்த 5 வயது சிறுமி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளார்.

 

மற்ற குழந்தைகளை இறக்கி விட்ட வேன் ஓட்டுனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் வேன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

 

வழக்கு நெல்லை மாவட்டம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. சம்பவம் தொடர்பாக 31 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டு நிறைவடைந்த நிலையில் குற்றவாளிக்கு தமிழகத்திலேயே முதன்முறையாக சாகும்வரை இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி இந்திராணி தீர்ப்பு அளித்தார்.

 

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அபராத தொகையுடன் சேர்த்து அரசு தரப்பில் 2 லட்சத்து 35 ஆயிரம் என மொத்தம் 3 லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் குழந்தையின் காப்பாளர் பெயரில் வங்கியில் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பெருமாள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Right Menu Icon