--- --:--:-- --

கோவில் திருவிழாவில் முன் விரோதம் காரணமாக விவசாயி வெட்டி கொலை..!

11

துரை மாவட்டம் சோழபுரத்தில் இருதரப்பினர் இடையேயான முன்விரோதத்தில் கோவில் திருவிழாவில் விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது.

 

கடந்த ஆண்டு செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததால் இந்த ஆண்டு அமைதிப் பேச்சுக்கு பின்னரே திருவிழா நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை நடைபெற்ற திருவிழாவின்போது விவசாயி செல்லத்துரை என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

 

இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் மீது வழக்கு பதியப்பட்டு ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். எஞ்சியவர்களையும் கைது செய்ய கோரி 500-க்கும் மேற்பட்டோர் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 

Leave a Reply

Right Menu Icon