தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை தற்போதைய கூட்டணியே தொடரும்..!
தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை தற்போதைய கூட்டணியே தொடரும் என அந்தக் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கூறிய அவர் மத்திய அரசு திட்டங்களால் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் அதிக பயன் அடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.







