--- --:--:-- --

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்வு..!

7

கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கர்நாடக மாநிலம் பெங்களூரு ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வுகே எஸ் ஆர் பெங்களூரு பெங்களூரு கன்டோன்மென்ட் மற்றும் ரயில் நிலையங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon