ஆட்ஸ் பார்த்தால் காசு கிடைக்கும் என நம்பி ரூ.3 லட்சம் பணத்தை இழந்த பெண்..!
திருப்பூர் அருகே instagramயில் வந்த விளம்பரத்தை நம்பி லட்ச கணக்கில் பணத்தை இழந்த கர்ப்பிணி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த அபிராமி.
இவர் விளம்பரத்தை பார்த்தால் பலன் கிடைக்கும் என்று விளம்பரத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்துள்ளார். 10 விளம்பரங்களை பார்த்தால் 200 ரூபாய் கிடைக்கும் என்றும் பணம் செலுத்தினால் விளம்பரம் பார்ப்பதற்கான தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பி 3 லட்சம் வரை பணம் கட்டி ஏமாந்துள்ளார். இது தொடர்பாக அவர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.





