கனரக வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!
மதுரையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கனரக வாகனத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. மதுரை மாவட்டம் தங்கங்குளம் அருகே கனரக வாகனம் ஒன்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கம்பியை கடந்து சென்றது.
அப்பொழுது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கனரக வாகனத்தின் மீது மோது விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





