நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா போதையில் இளைஞர் ரகளை..!
கோவை நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா போதையில் ரகளை செய்த இளைஞர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அபிலேஷ்.
இவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வழக்கின் விசாரணைக்காக கோவை நீதிமன்றம் சென்றுள்ளார். அப்பொழுது கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையினர் அபிலாஷை விசாரணைக்காக கைது செய்து அழைத்து சென்றனர்.





