மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை.. பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி புதுக் குடியைச் சேர்ந்த மீனவர் ராமகிருஷ்ணன் தனக்கு சொந்தமான படகில் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது இவரது வலையில் அரிய வகை கடல் ஆமைசிக்கியது.
வலையில் சிக்கிய அரிய வகை ஆமை சுமார் 80 கிலோ எடை கொண்டதாக இருந்ததை மீண்டும் பத்திரமாக நீண்ட நேரம் போராடி வலையிலிருந்து மீட்டு கடலில் விட்டனர். தற்போது கடல் ஆமை அடிக்கடி வலையில் சிக்குவதால் வலை மிகுந்த சேதம் ஏற்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.





