--- --:--:-- --

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம்..!

5

செகந்திராபாத் விரைவு ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவத்தில் உதவிய இறுதியாண்டு மருத்துவ மாணவியின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கர்ப்பிணி ஒருவர் நேற்று முன்தினம் ரயிலில் பயணம் செய்துள்ளார். அதே பெட்டியில் மருத்துவ மாணவி ஒருவரும் பயணம் செய்துள்ளார்.

 

ஓடும் ரயிலில் திடீரென அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சகபயணிகள் என்ன செய்வதென தெரியாமல் இருந்த பொழுது இறுதி ஆண்டு மருத்துவ மாணவி பாதுகாப்பாக குழந்தையை பெற்று வருவதற்கு உதவி செய்தார்.

 

ரயில் நிலையத்தை அடைந்ததும் சகபயணிகள் இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பிரசவத்திற்கு பின்னர் தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon