உங்களை சும்மா விடமாட்டேன் நாயை கத்தியால் கொன்ற நபர்.. பேரம் பேசிய போலீஸ்..!
திருப்பதியில் தனது வளர்ப்பு நாயை கொன்றவர்களை கைது செய்யக்கோரி பெண் ஒருவர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதையடுத்து மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
நாய் தங்களது வீட்டை பார்த்து குறைத்ததால் எதிர் வீட்டில் வசிக்கும் சாய்குமார், சிவகுமார் ஆகியோர் கத்தியால் வெட்டியும் கொன்றதாக கூறப்படுகிறது. அந்த பெண் புகார் அளித்தும் கைது செய்யாமல் இழப்பீடாக 20 லட்சம் ரூபாய் பெற்று தருவதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர் போராட்டம் நடத்தியுள்ளார்.





