உழுவதற்கு பணம் இல்லாததால் மாடுகளுக்கு பதில் மகள்களை வைத்து உழவு செய்த விவசாயி..!
ஆந்திர மாநிலம் சித்தூரில் விவசாயி ஒருவர் பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தனது இரண்டு மகள்களை கொண்டு உழவு பணி செய்துள்ளார். மதனப்பள்ளியை சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவ் கொரொனா ஊரடங்கால் நிலத்தில் விளைந்த தக்காளிகளை வெளி மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்க முடியாமல் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் மீண்டும் நிலத்தில் தக்காளியை பயிரிட முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கினார். உழவு மாடுகளை ஈடுபடுத்தவோ, கலப்பை வாங்கவோ பணம் இல்லாததால் முயற்சியை கைவிடாமல் 2 மகள்களை கொண்டு உழவு பணியில் ஈடுபட்டார். கலப்பை போன்ற கம்பை 2 மகள்களும் இழுத்துச்செல்ல, நாகேஸ்வரராவ் அதன் பின்னே அழுத்தியபடி வந்தார். அவருடைய மனைவி தக்காளி விதையை தூவியபடி சென்றார்.







