ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு ! உயிர்தப்பிய பயணிகள்
வேளச்சேரி 100 அடி சாலை குருநானக் கல்லூரிக்கு எதிர்புறத்தில் மாநகர பேருந்து வந்து கொண்டிருந்தது அந்த பேருந்து இயக்கியவர் ராஜேஷ்கண்ணா என்பவர் பேருந்து ஓட்டுநர் திடீரென ராஜேஷ்கண்ணா விற்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் அவர் பேருந்து இன்று கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் நிலைகுலைந்து உடனடியாக வாகனத்திலேயே வழங்கியுள்ளார்.
வாகனத்தில் மயங்கியதால் ஆக்சேட்டில் கால் வைத்ததன் காரணமாக முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்களில் முட்டிமோதி வாகனங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாயின. ஆனால் வாகனத்தில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது சாலையின் ஓரம் இருந்த ஒருவர் ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் ஏறி பிரேக்கை அழுத்தியுள்ளார். அந்த காட்சியும் சிசிடிவி பதிவாகியுள்ளது. தற்போது வைரலாகி வருகிறது.





