தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா அருகே உள்ள வரவணி கிராமத்தை சேர்ந்தவர் சகாய மாதா தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார். இவரை கடந்த 27ம் தேதி தனியார் நிதி நிறுவனத்தில் தூண்டுதலின்பேரில் வீடு புகுந்து தாக்கிய நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த புகாரின் பேரில் உரிய குற்ற வாளிகளின் பேரில் வழக்கு பதிவு செய்யாமல் மாறாக காயம்பட்ட சகாயமாதா மீதே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது. எனவே உரிய குற்றவாளிகள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்.எஸ் மங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் அருள், கம்பனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் சேதுராமன், தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கலையரசன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் முத்துராமன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்ட கோசங்கள் எழுப்பினார்கள்.






