--- --:--:-- --

ஆடு மேய்க்க சென்ற இடத்தில் மூதாட்டியின் காலை கடித்துக் குதறிய முதலை..!

5

ரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியை முதலை கடித்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

 

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மாள் என்பவர் மேச்சலுக்காக தனது ஆடுகளை கொள்ளிடம் கரையோரம் ஓட்டி சென்றுள்ளார்.

 

அப்பொழுது அந்த பகுதியில் கரையில் ஒதுங்கி இருந்த முதலை எதிர்பாராத விதமாக திடீரென மூதாட்டியின் காலை பிடித்து கடித்துக் கொண்டது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சின்னமாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon