தானாக உடலில் தீப்பற்றி எரியும் குழந்தை..!
உயிருள்ள மனிதன் சில நேரங்களில் எந்த ஒரு தீ மூட்டியும் இல்லாமல் பற்றி எரியும் நிகழ்வை மாந்தர் தாமாகப் பற்றி எரிதல் என்று கூறுகிறார்கள். வரலாற்றில் 300 ஆண்டுகளில் 200 நிகழ்வுகள் இதுபோன்ற கொண்டுள்ளது.
இதில் பெரும்பாலானவை இன்னும் நிரூபிக்கப்படாத ஒன்றாக உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. எரியும் பொழுது அருகில் எரியூட்ட கூடிய எந்த ஒரு பொருளும் இல்லாமல் இருத்தல், எரிந்த நிலையிலும் உடலில் காயங்கள் இருக்கும். இது குழப்பத்திலேயே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த குழந்தையின் உடலில் திடீரென தீப்பற்றியது. அது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். குழந்தையின் உடலில் இருந்து ரத்தம், சிறுநீர் ஆகியவற்றில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
குழந்தையின் ஆய்வு முடிவுகளில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை எனவும், குழந்தையின் உடலில் தானாக தீப்பற்றி கொள்ளும் அதிசயம் இருப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த விஷயம் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.





