வீட்டின் வாசலில் மந்திரித்த முட்டை – குடியாத்தத்தில் பெண் கதறல்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ராணுவ வீரரின் மனைவி மஞ்சுளா வசிக்கும் வீட்டின் வாசலில் இன்று அதிகாலை மந்திரித்த முட்டைகள் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளாகத் தனியாக வசித்து வரும் மஞ்சுளா, பழைய முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் தன்னை அச்சுறுத்தவே இவ்வாறு செய்துள்ளதாகக் கூறி கதறித் துடித்தார். கடந்த ஆண்டும் இதேபோன்ற பிரச்சனையால் அவர் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பயப்படும் அவர், பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் முறையிட்டுள்ளார். அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





