--- --:--:-- --

கல்லூரி மாணவி புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டிய சிறுவன்

4

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய கன்னியாகுமரியை சேர்ந்த பள்ளி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

காஞ்சிபுரம் தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தொலைபேசியில் ஒருவன் மிரட்டியுள்ளான். இதுகுறித்து மாணவி மற்றும் அவரது பெற்றோர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தனர்.

 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தொலைபேசியில் மிரட்டிய நபர் கன்னியாகுமரியை சேர்ந்த பள்ளி மாணவன் என்பதும், கல்லூரி மாணவியின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆபாசமாக மார்பிங் செய்ததும் தெரியவந்தது.

 

இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த காவல்துறையினர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவன் சீர்திருத்த இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon