வீட்டுமனை அங்கீகாரத்திற்கு ரூ.6 லட்சம் லஞ்சம் – கையும் களவுமாக சிக்கிய மாநகர ஆய்வாளர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வீட்டு மனை அங்கீகாரம் தர லஞ்சம் பெற்ற மாநகர அமைப்பு ஆய்வாளரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆவடியில் வசித்து வரும் ரமேஷ் என்பவர் தமது நிலத்திற்கு வீட்டு மனை அங்கீகாரம் பெறுவதற்காக மாநகராட்சியை அணுகியுள்ளார்.
அவரிடம் மாநகரமைப்பு ஆய்வாளர் காம துரை என்பவர் ஆறு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ரமேஷ் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் அளித்தார்.
அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒரு லட்சம் முன்பணம் தருவதாக கூறி ஆய்வாளர் காம துரை இந்து கல்லூரி அருகே வரவழைத்த ரமேஷ் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஆய்வாளரை கைது செய்தனர்.






