--- --:--:-- --

தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டல்..!

4

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் வந்ததையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

பள்ளிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் பள்ளி வளாகத்தை சோதனை செய்தனர். அப்போது வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்தது பொய் என தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon