--- --:--:-- --

கழிப்பறையை தேய்த்து சுத்தம் செய்த ஆட்சியர்..!

11

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அரசு பள்ளி கழிப்பறையை தானே தேய்த்து சுத்தம் செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் இன்று முதல் நம் பள்ளி நாம் பெருமை என்ற தலைப்பில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மை பணிகள் துவங்கியுள்ளன.

 

ஆட்சியர் மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் விழுப்புரம் நகராட்சி பள்ளியில் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தனர். அப்போது மோகன் மாணவர்கள் கை கழுவும் இடங்கள் தூய்மை இல்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டியதுடன் அதனை தானே தன் கைகளால் தேய்த்து சுத்தம் செய்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon