தடுப்பூசி செலுத்தாதவர்கள் மூலம் புதிய வகை கொரோனா பரவுமா..?
தடுப்பூசி போடாத நபர்கள் மூலம் புதிய வகை தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவ துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
கட்டுப்பாடுகள் தேவை என்பதையும், நோய் பரவலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை அறிவிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார். ஜூன் 12ஆம் தேதி ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கிறார்.






