ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் நீக்கப்படவில்லை..!
ரூபாய் நோட்டில் இடம் பெறும் மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டு வேறு தலைவர்களின் படத்தை பயன்படுத்தும் திட்டம் இல்லை என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூபாய் நோட்டுகளில் தற்பொழுது உள்ள மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக வேறு தலைவர்களின் படங்கள் பயன்படுத்த இருப்பதாக வெளியான தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டு வேறு தலைவர்களின் படத்தை பயன்படுத்தும் திட்டம் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.





