--- --:--:-- --

அவசர முன்பதிவுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம்..!

3

அவசர ஆவணப்பதிவுக்காக தன் பெயரில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தி ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம் என பத்திரப்பதிவுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவண பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறுகிய கால அவகாசத்தில் பத்திரப்பதிவு செய்ய விரும்புவோர் வசதிக்காக அவசர முன்பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதற்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான ஆவணப்பதிவு நடைபெறும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவசர முன்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் நாளொன்றுக்கு ஒரு சார்பதிவாளர் பத்து பேர் வரை அவசர முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon