ரசிகர்கள் முன்னே உயிர் பிரிந்த மற்றொரு பிரபல பாடகர்.!
இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல பின்னணி பாடகர் கே கே மாரடைப்பு காரணமாக மேடையிலேயே உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பிரதமர் மோடி மற்றும் திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
தாமிரபரணி, ஆடுகளம், கண்ட நால் முதல், காக்க காக்க உள்ளிட்ட தமிழ் படங்களில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளா.ர் கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் டெல்லியில் உள்ள கல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 53 வயதான பாடகர் கிருஷ்ணகுமார் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பின்னணி பாடகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாடகர் கிருஷ்ணகுமாரி மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். கேகே பாடிய பாடல்கள் அனைத்து வயதினரையும் ஈர்க்க கூடியது என்றும், அவரது பாடல்கள் பல விதமான உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாடல்கள் மூலம் அவரை நினைவு கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோன்று பின்னணி பாடகருக்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





