7 வயது சிறுமிக்கு அலட்சிய சிகிச்சையால் உயிரிழந்த பரிதாபம்..!
முறையான சிகிச்சை அளிக்காததால் 7 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த முதல் கோட்டையை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் 17 வயது சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்த நிலையில் பூச்சி மாத்திரை கொடுத்து அனுப்பியுள்ளனர். சிறிது நேரத்தில் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். அவரை மீண்டும் மருத்துவமனை கொண்டு வந்தபொழுது திண்டுக்கல் அனுப்பி வைத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்ற நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 50 பேர் வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





