--- --:--:-- --

ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி..!

7

ஜப்பானில் நடைபெறும் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டோக்கியோ புறப்பட்டு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது.

 

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார். குவாட் அமைப்பின் அங்கம் வகிக்கும் நாடுகள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

 

குவாட் அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த மாநாட்டின் போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க அதிபர் பயணம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon