இனி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம்..!
பாலியல் தொல்லைகளிலிருந்து பள்ளி குழந்தைகளை காக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதை கட்டாயம் ஆக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த வழிபாட்டு நெறிமுறைகள் உருவாக்கி பாலியல் தொல்லைகளில் இருந்தும் பள்ளி குழந்தைகளை பாதுகாக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பணியிடங்களில் விதிமுறைகள் இருப்பதுபோல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக மனு மீது பதிலளிக்க அனைத்து மாநில மத்திய அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.





