தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..?
பள்ளி திறக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் நடந்து வரும் பொதுத் தேர்வுகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடைகின்றன.
ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வுகள் முடிவடைந்து விட்டன. அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி விரைவாக அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.





