ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கியவர் அதிரடி கைது..!
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகள் வாங்கி பயன்படுத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆன்லைன் சேவை மூலம் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் 260 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.





