நாளை முதல் வெப்ப அலை குறைய வாய்ப்பு..!
டெல்லி வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவை ஒட்டிய பகுதிகளில் நாளை முதல் வெப்பம் குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
இது டெல்லியில் கடந்த 22 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச வெப்ப நிலையாகும். வெப்ப அலை வீசியதால் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் நாளை முதல் வெப்பநிலை குறைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை முதல் வெப்பம் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.





