ஜூன் மாதத்தில் 4 ஆவது கொரோனா அலையா..!
கொரொனா பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை என்ற சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் கோரணா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் நான்காவது அலை ஜூன் மாத தொடக்கத்தில் இருக்குமென கான்பூர் ஐஐடி கணித்து இருக்கும் நிலையில் அண்மைக்காலமாக நாட்டில் தினசரி கொரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தேசிய அளவில் கேரளா, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா தொற்று பரவல் சதவீதம் கடுமையாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி நாட்டின் ஒரே நாளில் 2183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





