தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில்லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





