அதிக வெப்பத்தால் பற்றி எரிந்த பேருந்து..!
காஞ்சிபுரத்தில் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென தீப்பிடித்தது. காஞ்சிபுரம் இந்திராநகர் பகுதியில் பிரபல இருசக்கர வாகன விற்பனையகம் அருகேயுள்ள காரிலிருந்து தனியார் தொழிற்சாலையின் பேருந்து நிறுத்தப்படுவது வழக்கம்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தின் உள்ளே திடீரென தீப்பற்றியது. இதைக் கண்ட அந்த பகுதி மக்கள், இருசக்கர வாகன விற்பனையாளர்களும் தீயணைப்பான் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் பற்றிய தீயை அணைத்தனர். அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என தீயணைப்புத்துறையினர் கூறினார். இருப்பினும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





