சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு..!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் ஆலய வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, சிதம்பரம் ஆகிய இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





