--- --:--:-- --

4,500 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை..!

9

லங்கையில் கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விற்பனை செய்வதை கண்டித்து இந்திய வம்சாவளித் தமிழர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

 

இதன் காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டு நாடு முழுவதும் மக்களின் போராட்டம் வெடித்தது. இதன் ஒரு பகுதியாக நுவரெலியா மாவட்டம் கோட்டை பகுதியில் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு 2,800 ரூபாய் மதிப்பிலான சிலிண்டர் 4,500 ரூபாய்க்கு கடை உரிமையாளர்கள் விற்பனை செய்கின்றனர்.

 

அதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியாயமான விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon