கல்யாணம் எப்போ என ரசிகர் கேட்ட கேள்வி..! சோனாக்ஷியின் அதிரடி பதில்..!
எப்போது உங்களுக்கு கல்யாணம் என ரசிகர் கேட்ட கேள்விக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனாக்ஷி சின்கா அளித்த பதிலில் வைரலாகி வருகிறது. தனக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் சோனாக்ஷி. நடிகர் ஜகீர் இக்பாலும், சோனாக்ஷியும் பல வருடமாக காதலித்து வருவதாக சொல்கிறார்கள்.
ஆனால் இதுபற்றி இருவரும் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி ஜகீர் இக்பாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மாதிரியான ஒரு மனிதனை உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது என வியந்து போற்றினார் சோனாக்ஷி.
அந்த ரசிகர் எல்லாருக்கும் கல்யாணம் ஆகுது உங்களுக்கு எப்ப கல்யாணம் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எல்லாருக்கும்தா கோவிட் வருது அதற்காக நானும் கோவிட் வாங்கிக் கொள்ள வேண்டுமா எனக் கேட்டார். இது தற்போது வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





