--- --:--:-- --

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு கொரோனா..!

9

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு மீண்டும் கொரொனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடாவுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

எந்தவித அறிகுறியும் இல்லாமல் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தேவகவுடாவின் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரொனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு கொரொனா தொற்று உறுதியாகி உள்ளது.

 

Right Menu Icon