மாணவியை  கர்ப்பமாக்கிய 19 வயது காதலன் கைது..!

புதுக்கோட்டையில் மாணவியை கர்ப்பமாக்கிய 19 வயது காதலன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற அந்த 19 வயதான அந்த நபர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.

 

தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் மாணவி தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக மாணவி தினேஷ்குமார் மீது புகார் அளித்திருக்கிறார். எனவே, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.