--- --:--:-- --

பூனையின் கழிவில் போடப்படும் காபியின் விலை 1,500 ரூபாயா..!

5

லகில் பெரும்பாலான மக்கள் காபி பிரியர்களாக உள்ளனர். சாதாரணமாக ஒரு காபியின் விலை 15 ரூபாய் தான். ஆனால் சிவிட் காபியின் விலை ஒரு கப் 1,500 ரூபாய் என்கிறார்கள். இந்த சிவிட் காபியை வெளிநாடுகளில் மட்டும் இல்லாமல் இந்தியாவிலும் உற்பத்தியாகிறது.

 

ஒரு பிரபல நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் சிவிட் காபி பவுடர் நிறுவனத்தை நிறுவியுள்ளது. இதுகுறித்து நரேந்திர ஹெப்பர் பேசியபோது நிறுவனம் ஆரம்பித்த போது ஒரு நாளில் 20 கிலோ என்று உற்பத்தியை ஆரம்பித்தோம்.

 

பிறகு நூறு, 200 என்று முன்னேறி தற்போது ஆயிரம் கிலோவை டார்கெட் வைத்து உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். சிவிட் பூனையின் கழிவிலிருந்து இந்த பவுடர் எடுக்கப்படுகிறது. இந்த பூனை காபி செரிகளை மட்டும் சாப்பிடும்.

 

காபி கொட்டைகளை உணவாகக் கொடுத்து பின்னர் ஜீரணமாகி வருவதால் கழிவுகளிலிருந்து அவற்றை எடுத்து சுத்தம் செய்து காபி கொட்டைகளை தயாரிக்கின்றன. இந்த பூனையின் வயிற்றில் சுரக்கும் திரவத்தால் இது மேலும் சுவையாக மாறுகிறது.

 

Right Menu Icon