சென்னையில் கண் தெரியாத அளவுக்கு புகை..!
சென்னையில் கொண்டாடப்பட்ட போகி பண்டிகை காரணமாக வண்ண புகை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழ்நாட்டில் பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப பொதுமக்கள் தங்கள் பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். சென்னையில் வழக்கமாக அதிகாலையில் ஏற்படும் புகையும் சேர்ந்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.





