விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து..!
கௌகாத்தி – பிகேனிர் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மேற்குவங்க மாநிலம் சிலிகுரி என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விரைவு ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.





