--- --:--:-- --

5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு !

1

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

 

முதல் கட்டமாக பிப்ரவரி 10-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக பிப்ரவரி 20ஆம் தேதியும், நான்காம் கட்டமாக பிப்ரவரி 23ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும். ஐந்தாம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும், ஆறாம் கட்ட தேர்தல் மார்ச் 3ஆம் தேதி, ஏழாம் கட்ட தேர்தல் மார்ச் 7ம் தேதியும், வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

 

பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

 

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரில் முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon