--- --:--:-- --

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி மருத்துவமனையில் இருந்து மாயம்..!

2

சென்னை திருமுல்லைவாயலில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் மாயமான நிலையில் சுகாதாரத்துறையினர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

 

திருமுல்லைவாயிலை சேர்ந்த 20 வயதான பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் உடல்நலக்குறைவால் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் தொற்று உறுதியானது. அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை திடீரென அவர் மாயமாகியுள்ளார்.

 

கொரொனா உறுதியான அச்சத்தில் அவர் வீட்டிற்கு சென்றதும் தெரிய வந்த நிலையில் சுகாதார பணியாளர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon