அதிகாரிகள் சோதனையின் போது சிறையில் செல்போனை வாயில் போட்டு விழுங்கிய கைதி..!
டெல்லி திகார் சிறையில் அதிகாரிகள் சோதனையின்போது கைதி ஒருவன் தான் வைத்திருந்த செல்போனை அப்படியே வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடம் மொபைல் போன்கள் உள்ளிட்ட சிறிய தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என கடந்த 5ஆம் தேதியன்று சிறைத்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது அந்த சிறையில் எண் ஒன்றில் இருந்த கைதி ஒருவன் தான் வைத்திருந்த சிறிய ரக செல்போனை அதிகாரிகள் சோதனை செய்து விடுவார்கள் என்பதால் விழுங்கியுள்ளார்.
மத்திய சிறையின் இயக்குனர் சந்தீப் கோயல் செல்போனை விழுங்கிய கைதி நிலைமை சிகிச்சைக்கு பிறகு முன்னேறி உள்ளதாகவும் ஆனால் மொபைல் போன் இன்னும் வயிற்றிலேயே இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





